டெமோ
நிஜ



xtrade logo

எக்ஸ்டிரேடு மூலம் சி.எஃப்.டிகளை வர்த்தகம் செய்யுங்கள்

எங்களுடைய ஆற்றல்மிக்க புதுமையான டிரேடிங் பிளாட்ஃபார்ம், எங்களுடைய விரிவான சிஎஃப்டி இன்ஸ்ட்ருமெண்ட்கள் பற்றிய போட்டித்திறம் மிக்க ஸ்பிரெட்கள் மற்றும் மார்ஜின்களை அளிக்கிறது.

Xtrade மூலம் CFDகளை வர்த்தகம் செய்யுங்கள்

Xtrade மூலம் கான்ட்ராக்ட்ஸ் ஃபார் டிஃபரன்ஸ் (CFDகள்) – நிதிசார்ந்த சந்தைகள் மூலம் வர்த்தகம் செய்வதற்கான வசதியான வழி.

CFD வர்த்தகம் சந்தை வர்த்தகர் ஒரு சொந்த்தின் எதிர்கால மதிப்பு கூடுமா குறையுமா என நினைப்பதில் ஔர் நிலையை அறிய அனுமதிக்கிறது.

இப்போது தொடங்கவும்! பங்குகள், பொருட்கள், குறியீடுகள் அல்லது ஃபாரக்ஸில் CFDகளை வர்த்தகம் செய்யுங்கள்.

கமிஷன்கள் கிடையாது - நிலையான ஸ்பிரடுகள்!

வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். கமிஷன்கள் இல்லாத வர்த்தகம் மூலம் பயன் பெறவும்! எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.

CFDகளை லீஅரேஜுடன் வர்த்தகம் செய்யுங்கள்

CFDகளில் குறைந்த மார்ஜினில் கிடைக்கும் ஆதாயத்தை அனுபவிக்கவும். உங்கள் முதலீட்டில் ஒப்பிடத்தக்க சிறிய தொகையுடன் சமமாகு போது நிதிசார்ந்த சந்தைக்கு பெரிய வெளிப்படுத்தலை அடைவதில் பயனடையவும்.

சந்தை எழுச்சி அடைந்தாலும் வீழ்ச்சி அடைந்தாலும் லாபம் பெறலாம்

உங்கள் தொடங்கும் வாங்குதல் அல்லது விற்றல் நிலையை அமைக்க உங்கள் சந்தை யூகங்களைப் பயன்படுத்தவும். நீண்ட அல்லது சுருக்கத்தைப் பெறவும்.

Xtrade மூலம் வர்த்தகக் கணக்கைத் தொடங்கவும்

எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.

CFDகளின் பட்டியல்

"காண்ட்ரேக்ட்ஸ் ஃபார் டிஃபரென்ஸ்" (CFDகள்) க்கான பொருள் விவரம்

வர்த்தக நிபந்தனைகள்

சி.எஃப்.டிகள், ஆதார சொத்துகள் வர்த்தகம் செய்யப்படும் இடத்தில் சி.எஃப்.டிகளுக்கான ஆதார சொத்துகள் (பொருந்துமென்றால்) தொடர்பாக எந்தஒரு ஆலோசனையையும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் அளிக்காது அல்லது ஆலோசனை மற்றும்/அல்லது பரிந்துரையை வாடிக்கையாளர் கோரும் சூழல் உள்பட எந்த சூழலிலும் மூதலீட்டுப் பரிந்துரைகளை செய்யாது என்பதை வாடிக்கையாளர் புரிந்துகொள்கிறார் மற்றும் ஏற்றுக்கொள்கிறார். அனைத்து மூதலீட்டு முடிவுகளையும் வாடிக்கையாளர் தனியாகத் தான் மேற்கொள்ளவேண்டும்.

சாத்தியமான அதிகபட்ச இழப்பு

சி.எஃப்.டிகள் (காண்ட்ரேக்ட்ஸ் ஃபார் டிஃபரென்ஸ்) வரையறை மூலம் ஆதார சொத்து மீதான எந்த ஒரு உரிமையையும் (அல்லது கடமையையோ) அளிக்கவில்லை. முடிவுற்ற சி.எஃப்.டி ஒப்பந்தத்தின் பண மதிப்பை நிறுவனம் (அல்லது பொருத்தமான கழிக்க வேண்டியதிலிருந்து) வாடிக்கையாளரின் கணக்கில் சேர்த்துவிடும். சி.எஃப்.டி நிலையை தொடங்கிய மற்றும் மூடிய விலைக்கு (வாடிக்கையாளரின் விருப்பத்தால் தொடங்கி மூடப்பட்டது) இடையிலான வித்தியாசத்திலிருந்து பிரீமியம் கட்டணங்கள்ஏதேனும் இருந்தால் அது கழிக்கப்பட்டு மீதமுள்ளதுதான் இந்த பணமதிப்பு ஆகும். இந்த மொத்த விளைவு நெகட்டீவாகவும் (நஷ்டம்) இருக்கலாம் அல்லது பாசிட்டீவாகவும் (இலாபம்) இருக்கலாம். இழக்கக்கூடிய அதிகபட்ச தொகை என்பது சி.எஃப்.டி தொடங்க வாடிக்கையாளர் பயன்படுத்திய மார்ஜினாக மட்டுமே இருக்காது, மேலும் வாடிக்கையாளர் தனது கணக்கில் செலுத்திய தொகை மொத்தமும் அல்லது அதில் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். வாடிக்கையாளரின் இழப்பு ஒட்டுமொத்த டெப்பாசிட் தொகை என்ற அளவுக்கு நீளும்போது, திறந்திருக்கும் அனைத்து நிலைகளும் பணமாக்கப்பட்டு அவரின் இருப்புத்தொகை 0 ஆக இருக்கும். வாடிக்கையாளரின் இருப்புத்தொகை 0 க்கு கீழே செல்லும்போது (அதாவது நெட்டீவ் இருப்பு) ஒழுங்குமுறை தேவைப்பாடுகளுக்கு ஏற்ப அந்த நெகட்டீவ் இருப்புத்தொகையை நிறுவனம் 0 க்கு மாற்றும் (நெகட்டீவ் இருப்புத்தொகை பாதுகாப்பு). கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்கள்.

மாறும்தன்மை:

சி.எஃப்.டி ன் விலை ஆதார சொத்துக்களின் விலையிலிருந்து பெறப்படுகிறது (பங்குகள், இன்டிசஸ் கமாடிட்டிகள் மற்றும் ஈ.டி.எஃப்கள் உள்ளிட்டவை; விவரங்களுக்கு எங்களுடைய சி.எஃப்.டிகள் பட்டியல் பிரிவைப் பாருங்கள்), இது பெருமளவு மாற்றத்துக்கு உள்ளாகக்கூடியது. நிதி இன்ஸ்ட்ருமெண்டுகள் மற்றும் ஆதார சொத்துக்களின் விலைகள் வாடிக்கையாளர் மற்றும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீறி அதிவிரைவாக ஏறி இறங்கக்கூடும். சில குறிப்பிட்ட சந்தை நிலைகளில் அறிவிக்கப்பட்ட விலைகளில் வாடிக்கையாளரின் ஆர்டரை செயல்படுத்துவது சாத்தியமாகாமல் போகலாம். நிதி இன்ஸ்ட்ருமெண்டுகள் மற்றும் ஆதார சொத்துக்களின் விலைகள், தேசிய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் மற்றும் அதுசார்ந்த சந்தையில் உள்ள நிலைகளைப் பொருத்தும் மற்ற பிற காரணிகளாலும் மாறக்கூடும்.

டெரிவேட்டிவ் நிதி இன்ஸ்ட்ருமெண்டுகளில் ஆஃப்-எக்ஸ்சேஞ் பரிவர்த்தனைகள்:

நிறுவனத்தால் வழங்கப்படும் சி.எஃப்.டிகள் ஆஃப்-எக்ஸ்சேஞ் பரிவர்த்தனைகள் (அதாவது கவுண்டரில் வாங்குபவை), அதே நேரத்தில் ஆன்லைன் டிரேடிங் பிளாட்ஃபார்ம்(களில்) நிறுவன சலுகைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அல்லது அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தை போன்ற மல்டிலேட்டரல் டிரேடிங் வசதியுடன் இணைக்கப்படவில்லை.


வர்த்தக நிபந்தனைகள் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன, சிறந்த செயல்பாட்டை நாங்கள் அளிக்கவேண்டும் மேலும் எங்கள் வாடிக்கையாளர் ஒப்பந்தம் மற்றும் எங்களுடைய சிறந்த பலன் மற்றும் ஆர்டர் செயல்படுத்தும் கொள்கைஆகியவற்றின் படி நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற கடப்பாட்டைப் பொருத்தது. எங்களுடைய டிரேடிங் பிளாட்ஃபார்ம் மூலமாக வாடிக்கையாளர் தொடங்கும் ஒவ்வொர சி.எஃப்.டி யும் நிறுவனத்துடன் ஒரு ஆர்டரில் ஈடுபடுவதாகும்; அது போன்ற ஆர்டர்கள் நிறுவனத்துடன் தான் முடிக்கப்படமுடியும், வேறு நபருக்கு மாற்றமுடியாது.

லீவரேஜ்:

ஒரு சி.எஃப்.டி ஆர்டரைச் செய்வதற்கு, வாடிக்கையாளர் கணக்கில் நிதி செலுத்தி ஒரு மார்ஜினை பராமரிக்க வேண்டும். பண மதிப்பில் ஒட்டுமொத்த ஒப்பந்த மதிப்புடன் ஒப்பிடுகையில் மார்ஜின் வழக்கமாக மிகச் சிறியதாக இருக்கும். வாடிக்கையாளர் “லீவரேஜ்” பயன்படுத்தி வர்த்தகம் செய்வார் என்பது இதன் பொருள். ஆகவே மிகச்சிறிய சந்தை மாற்றங்கள், வாடிக்கையாளரின் நிலையின் மதிப்பில் அதற்கேற்ற பெரிய அளவு மாற்றங்களைக் கொண்டுவரும், இது வாடிக்கையாளருக்கு சாதகமாகவும் இருக்கலாம் பாதகமாகவும் இருக்கலாம்.

வாடிக்கையாளரின் நிலைக்கு பாதகமாக சந்தை நகர்ந்தால் மற்றும்/அல்லது மார்ஜின் தேவைப்பாடுகள் அதிகரிக்கப்பட்டால், அவருடைய நிலையைப் பராமரிப்பதற்காக குறுகிய காலத்தில் கூடுதல் நிதியை டெப்பாசிட் செய்யும்படி வாடிக்கையாளர் அழைக்கப்படலாம். கூடுதல் நிதி டெப்பாசிட் செய்யும் கோரிக்கைக்கு இணங்கத் தவறினால், அவருடைய நிலை(கள்) மூடப்படலாம்.


லீவரேஜ் இழப்புகளை மற்றும்/அல்லது இலாபங்களை பன்மடங்காக்குகிறது என்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வர்த்தகக் கணக்குகளை கவனமாக கண்காணிக்கவேண்டும். நிறுவனம் வாடிக்கையாளரின் கணக்குகளை கண்காணிப்பதில்லை, மேலும் திறந்துள்ள நிலைகள் தொடர்பான எந்த ஒரு முடிவையும் வாடிக்கையாளர் சார்பாக எடுக்கமுடியாது.


உதாரணம்:

வாடிக்கையாளர் தன்னுடயை வர்த்தகக் கணக்கில் 2000 யு.எஸ்.டி ஐ டெப்பாசிட் செய்திருக்கிறார் மேலும் அதற்கான லீவரேஜ் 1:100 என வைத்துக்கொள்வோம். ஆகவே வாடிக்கையாளர் வர்த்தகம் செய்யக்கூடிய அதிகபட்ச உத்தேச மதிப்பு 200.000 USD (100 லீவரேஜ் X 2000 யு.எஸ்.டி).


100.000 யு.எஸ்.டி (இந்த நிலைக்குப் பயன்படுத்திய தொடக்க மார்ஜின் 1000 யு.எஸ்.டி) உத்தேச மதிப்புடன் வாடிக்கையாளர் சி.எஃப்.டி நிலையைத் திறந்திருப்பதாகக் கொள்வோம், ஆதார சந்தை வாடிக்கையாளருக்கு பாதகமாக 2.1% அளவுக்கு நகர்கிறது என்றால் இதன் விளைவாக வாடிக்கையாளரின் ஈக்விடி 2100 யு.எஸ்.டி அளவுக்கு குறையும், இதன் விளைவாக நிலை தானாக மூடப்படும், இதன் காரணமாக வாடிக்கையாளர் டெப்பாசிட் செய்த தொகை முழுவதையும் இழந்துவிடுவார். வாடிக்கையாளர் டெப்பாசிட் செய்த தொகை 2000 யு.எஸ்.டி ஆக இருக்கும்பட்சத்தில், இழப்பு 2100 அளவுக்கு செல்கிறது, வாடிக்கையாளர் தான் டெப்பாசிட் செய்த பணத்தை மட்டும்தான் இழப்பார் ஆனால் மீதமுள்ள 100 யு.எஸ்.டி ஐ திரும்ப செலுத்த வேண்டிய பொறுப்பு வாடிக்கையாளருக்கு இல்லை.


இதற்கு மாறாக வாடிக்கையாளருக்கு சாதகமாக 2.1% அளவுக்கு சந்தை நகர்ந்தால், இதன் விளைவாக அவரின் பங்கு 2100 யு.எஸ்.டி ஆக உயரும், வாடிக்கையாளர் தன்னுடைய நிலையை மூடாதவரை இந்தத் தொகை அவருடைய கணக்கில் செலுத்தப்படாது.


எளிமையான புரிதலுக்காக மேலே கூறிய உதாரணங்களில் தரகுகள் (பிரீமியம் கட்டணங்கள் போன்றவை) சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் . நிறுவனத்தின் தரகுகள் மற்றும் கட்டணங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக்செய்யுங்கள்.

அபாயக் குறைப்பு

வாடிக்கையாளரின் இழப்பைக் கட்டுப்படுத்த உதவும் ஸ்டாப் லாஸ் கருவிகள் போன்றவற்றை நிறுவனம் அளிக்கிறது.

ஸ்டாப் லாஸ் அறிவுறுத்தலை அளிக்கவேண்டியது வாடிக்கையாளரின் பொறுப்புதான். ஒரு நிலையைத் திறந்து ஸ்டாப் லாஸ் அறிவுறுத்தல் அளிக்கப்படும்போது, அந்த நிலை வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்துள்ள வரம்பின் அடிப்படையில் மூடப்படும்.


எப்படி இருந்தாலும் இந்த அபாயக் குறைப்புக் கருவிகள் எப்போதும் முறையாக வேலை செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை அதுவும் குறிப்பாக மோசமான சந்தை சூழல்களில் என்பதை வாடிக்கையாளர் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறார். இதனோடு கூட, சில குறிப்பிட்ட சந்தை நிலைகளில் ஸ்டாப் லாஸ் ஆர்டரை செயல்படுத்தும் விலை வாடிக்கையாளர் அமைத்த விலையைவிட மோசமாக இருந்து அதன் விளைவாக ஏற்படும் இழப்புகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம்.

பொருளின் தன்மை மற்றும் பண்புகள்

சி.எஃப்.டிகளில் வர்த்தகம் செய்வது ஊகம் சார்ந்தது, அதிக அபாயம் மிக்கது மேலும் அனைத்துப் பொதுமக்களுக்குமானது அல்லது, பின்வரும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமானது:


  1. இதிலுள்ள பொருளாதார, சட்ட மற்றும் பிற அபாயங்களைப் புரிந்து, சம்மதித்து ஏற்றுக்கொள்பவர்கள்.
  2. தங்களுடைய நிதிச் சூழல், நிதி ஆதாரங்கள், வாழ்க்கை முறை மற்றும் கடமைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஒட்டுமொத்த முதலீட்டு இழப்பையும் தாங்கிக் கொள்ள இயலுபவர்கள்.
  3. சி.எஃப்.டிகள் வர்த்தகம் பற்றிய அறிவும் அனுபவமும் உள்ளவர்கள்.

முழுமையான சி.எஃப்.டிகளே நிறுவனம் வழங்கும் நிதி இன்ஸ்ட்ருமெண்ட்கள், அதாவது ஆதார சொத்துக்களிலிருந்து (எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகள், கரன்சி ஜோடிகள், காமாடிட்டி ஃப்யூச்சர்கள் மற்றும் ஈ.எஃப்.டிகள்) பெறப்பட்ட மதிப்பு கொண்ட நிதி இன்ஸ்ட்ருமெண்ட்.

Ready to start trading?

Get started with your Xtrade account today

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.