டெமோ
நிஜ



xtrade logo

வர்த்தகத் தகவல்

பணம் எடுத்தல் கொள்கை

உண்மையான சிறப்புச் சேவையை வழங்குவதற்கான எங்கள் ஈடுபாட்டின் அங்கமாக, எக்ஸ்டிரேடு ("நிறுவனம்" அல்லது "நாங்கள்") பணம் எடுத்தல் கோரிக்கைகள் விரைவாகவும் சிறப்பாகவும் செயலாக்கப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கையையும் எடுக்கும். மோசடிகளிலிருந்து பாதுகாப்பதற்கு கூடுதல் தகவல்களையும் நாங்கள் கோரலாம். பரிவர்த்தனைகளும் நிதித் தகவலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதற்கு தொழில்துறையில் உள்ள முன்னணி பாதுகாப்பு மற்றும் என்கிரிப்ஷன் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம்.
*பணம்எடுக்கும் செயல்முறைக்கு முன்னர் உங்கள் கணக்கு முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தேவைப்படும் ஆவணங்களின் பட்டியல் இங்கே கிடைக்கும். சில சூழ்நிலைகளில், சில கூடுதல் ஆவணங்களைக் கோருவதற்கான உரிமை நிறுவனத்திற்கு உள்ளது.
தேவைப்படும் ஆவணங்கள்:
  1. அரசு வழங்கிய ஐ.டி/பாஸ்போர்ட்
  2. முகவரிச் சான்று
  3. பொருந்துதன்மை மதிப்பீடு

பணம் எடுத்தல் செயல்முறைகள்

திறந்தநிலைகள் உங்களுக்கு இருந்தால், உங்களது மொத்த இருப்புத் தொகையை உங்களால் எடுக்க முடியாது. பராமரிப்பு மார்ஜினைப் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்சத் தொகை.
(இருப்புத் தொகை – பராமரிப்பு மார்ஜின்) மற்றும் மார்ஜின் >= 1% = அதிகபட்ச பணம் எடுத்தல் தொகை

பணம் எடுத்தல் கோரிக்கைகளைச் செயல்படுத்த ஐந்து வணிக நாட்கள் வரை ஆகும். எங்கள் கட்டுப்பாட்டை மீறி ஏற்படும் தாமதங்கள் மூன்றாம் தரப்பு பணம்பெறுதல் முறைகளால் ஏற்படுக்ன்றன (அதாவது, கிரெடிட் கார்டு நிறுவனம், வயர் மூலம் பணம் அனுபும் வங்கி அல்லது பரிமாற்றங்களைத் தாமதிக்கும் இடைநிலை வங்கிகள், அதிகபட்சமாக 3 வாரங்கள் வரை ஆகலாம்).

எவ்வாற்ய் பணம் எடுக்கக் கோருவது?

  1. உங்கள் Xtrade கணக்கில் உள்நுழையவும்
  2. முதன்மைப் பக்கத்தில் "பணம் எடுத்தல்" என்பதில் கிளிக் செய்யவும்
  3. தொகையை உள்ளிட்டு "பணம் எடுத்தல்" பட்டனைக் கிளிக் செய்து சமர்ப்பிக்கவும்
  4. உங்கள் கோரிக்கையை நிறைவுசெய்ய, பணம் எடுத்தல் படிவத்தை அச்சிட்டு, கைமுறையாக கையொப்பமிட்டு [email protected] என்கிற முகவரிக்கு அல்லது தொலைநகலாக:+357 25030429
  5. அனுப்பவும்.
  6. உங்கள் கோரிக்கை நிறைவடைந்ததும், செயலாக்குவதற்காக தகவல் எங்களிடம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் பணமெடுத்தல் கோரிக்கை மின்னஞ்சல் உறுதியைப் பெறுவீர்கள்.

*பணம் எடுத்தல் நடைமுறைக்கு முன் உங்கள் கணக்கு முழுமையாகச் சரிபார்க்கப்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவும். தேவையான ஆவணங்களின் பட்டியலை இங்கே காணலாம். சில சூழ்நிலைகளில், சில கூடுதல் ஆவணங்களைக் கோருவதற்கான உரிமை நிறுவனத்திற்கு உள்ளது.

**டெபாசிட் செய்யப்பட்ட அதே முறையில் உங்கள் பணமெடுத்தல் செயலாக்கப்படும். கிரெடிட் கார்டு மூலம் டெபாசிட் செய்தால், பணமெடுத்தல் தொகை அந்த கிரெடிட் கார்டுக்கு அனுப்பிவக்கப்படும். அதுபோல, வங்கிப் பரிமாற்றம் மூலம் ஒரு டெபாசிட் செய்யப்பட்டால் பணமெடுத்தல் உங்கள் வங்கிக் கணக்கிற்கே பரிமாற்றம் செய்யப்படும். மின்-வாலட் மூலம் செய்யப்பட்ட பிற டெபாசிட்கள் வங்கிப் பரிமாற்றம் அல்லது Skrill/Netteler மின்-வாலட் மூலம் திருப்பி வழங்கப்படும்.

***எல்லா லாபங்களும் வங்கிப் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும். ($150க்கும் குறைவான லாபத் தொகை நிறுவனத்தால் ஏற்கப்பட்ட வேறு எந்த முறையின் மூலமும் பரிமாற்றம் செய்யப்படலாம், ஒழுங்குபடுத்தலுக்கு உட்பட்டது).

எனது பணம் எடுத்தல் கோரிக்கையின் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது?

  1. கணக்கு விருப்பங்கள் > நிதி மேலாண்மை > பணம் எடுத்தல் கோரிக்கைகள் என்பதில் கிளிக் செய்யவும்.




  2. உங்கள் பணம் எடுத்தலின் முழு விவரங்களுடன் புதிய பாப் அப் சாளரத்தைக் காண்பீர்கள்.

*உங்கள் கோரிக்கை "நிலுவையிலுள்ளது" என்று இருக்கும் போது எந்த நேரத்திலும் உங்கள் கோரிக்கையை நீங்கள் ரத்து செய்யலாம் என்பதை அறிந்துகொள்ளவும்

பணம் எடுத்தல் ஏன் நிராகரிக்கப்பட்டது?

  • உங்கள் கணக்கு முழுமையாகச் சரிபார்க்கப்பட்டது.
  • கையொப்பமிட்ட பணம் எடுத்தல் படிவத்தைப் பெறவில்லை.
  • பணம் எடுத்தல் படிவம் கையால் கையொப்பமிடப்படவில்லை, அதன் பகுதிகளை மட்டுமே பெற்றோம் அல்லது ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட பணம் எடுத்தல் தேதியைக் குறிக்கிறது
  • வழங்கப்பட்ட வங்கி/மின் வாலட் விவரங்களுக்கு எங்களால் நிதியைப் பரிமாற்றம் செய்ய முடியவில்லை அல்லது சரியான விவரங்களைப் பெறவில்லை.

பணம் எடுத்தல் கட்டணம்

பணமெடுத்தலைச் செயலாக்க Xtrade எந்தக் கட்டணமும் விதிக்கவில்லை. மொத்த பணம் எடுத்தல் தொகையும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு, கிரெடிட் / டெபிட் கார்டுக்கு அல்லது ஈ-வாலட்டிற்குப் பரிமாற்றம் செய்யப்படும், இருப்பினும் வங்கிகள் மற்றும் / அல்லது இடைநிலை வங்கிகள், செயல்முறைக் கட்டணங்கள் விதிக்கப்படலாம். அத்தகைய கட்டணங்களுக்கு நாங்கள் எந்தப் பொறுப்பும் ஏற்க மாட்டோம்.

கட்டண உதவி

உங்கள் ஆன்லைன் வர்த்தக அனுபவத்தை இனிமையானதாக்க எங்கள் வாடிக்கையாளர் ஆதரவுக் குழு உதவத் தயாராக உள்ளது, ஒரு நாளில் 24 மணி நேரமும் வாரத்திற்கு 5 நாட்களும் வசதி ஏற்படுத்தித் தரலாம். உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.
CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.